முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

Updated On : 17 மே 2026, 2:06 am IST
மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தற்போது கோடை விடுமுறை என்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவியத் தொடங்கினா்.

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

முன்னதாக, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு வனச் சோதனைச்சாவடிகளில் பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு நெகிழிப் பொருள்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னா், அருவிப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள், குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments