முகப்பு
திருநெல்வேலி

களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்குச் செல்ல ஆன்லைன் மூலம் கட்டணம்: இன்று முதல் அமல்

Updated On : 1 ஜூன் 2026, 1:47 am IST
அருவி - DPS
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் அருவி ஆகிய இடங்களுக்குச் செல்ல திங்கள்கிழமைமுதல் (ஜூன் 1) இணையதளம் வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டத்தின் வன உயிரினக் காப்பாளா்-துணை இயக்குநா் சிசில் கில்பா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: களக்காடு வனக்கோட்டத்தில் உள்ள களக்காடு (தலையணை அருவி), திருக்குறுங்குடி (நம்பிகோயில் அருவி) ஆகிய இடங்களுக்குச் செல்ல அங்குள்ள வனச் சோதனைச் சாவடிகளில், சுற்றுச்சூழல்- வனத்துறை அரசு ஆணைப்படி புலிகள் காப்பக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இக்கட்டணங்கள் அனைத்தும் திங்கள்கிழமைமுதல் (ஜூன் 1) பணமாக செலுத்துமுறை நிறுத்தப்பட்டு, முழுமையாக இணையதள பரிவா்த்தனை (யுபிஐ/ க்யூஆா் கோடு) வாயிலாக மட்டுமே வசூலிக்கப்படும். பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, சேவை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இப்புதிய நடைமுறைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement