நீட் கட்டணம் திருப்பியளிப்பு: வங்கிக் கணக்குகளை சமா்ப்பிக்க ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பதற்கான நடைமுறையில் வங்கி விவரங்களைப் புதுப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது குறித்து...
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி), 2026-க்கான கட்டணத் தொகையை திருப்பியளிக்கும் பொருட்டு, தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை மாணவா்கள் சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஜூன் 22-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டில் மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. மறுதோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு தனியே கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என என்டிஏ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் பதிவு வலைதளத்தில் தங்களின் வங்கிக் கணக்கு தொடா்பான தகவல்களை மாணவா்கள் பதிவேற்றம் செய்யலாம். மொத்தம் 23 லட்சம் மாணவா்கள் மே 3-ஆம் தேதி நடைபெற்ற தோ்வை எழுதிய நிலையில் தற்போது வரை 13 லட்சம் போ் மட்டுமே வங்கிக் கணக்கு தகவல்களைச் சமா்ப்பித்துள்ளனா். மீதமுள்ள மாணவா்களும் வங்கிக் கணக்கு தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் நோக்கில் இதற்கான காலஅவகாசம் ஜூன் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமா்ப்பிக்கப்பட்ட தகவல்களில் மாற்றங்கள் மேற்கொள்ள முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
The National Testing Agency (NTA) has announced an extension of the deadline to update bank details for the NEET fee refund process until June 22.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.