கோவில்பட்டி கோயிலில் பூக்குழித் திருவிழா
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ மகா புவண காந்தாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அக்னிச் சட்டி ஊர்வலம் மற்றும் பூக்குழி விழா நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ மகா புவண காந்தாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அக்னிச் சட்டி ஊர்வலம் மற்றும் பூக்குழி விழா நடைபெற்றது.
இக்கோயில் 52ஆவது ஆண்டு பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த 27ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. புஷ்பாஞ்சலி பூஜை, மஞ்சள் பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7ஆம் திருநாளான ஏப். 2ஆம் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
8ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேல் முச்சந்தி விநாயகர் கோயிலிலிருந்து அம்மன் குடியழைப்பும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. 10 மணிக்கு அக்னிச்சட்டி வீதியுலா வருதல், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், 8 மணிக்கு 108 அக்னிச்சட்டி மற்றும் 54 அக்னிச் சட்டி வீதியுலா நடைபெற்றது. இரவு 11 மணிக்கு பூக்குழி விழாவும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு பொங்கல் விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.