முகப்பு
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:38 am IST
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்து பேசினார்.
அவர் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலம், ரத்தினகிரி பகுதியில் விவசாயிகளின் எதிர்ப்பினால், அதிமுக ஆட்சியில் கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. தற்போது, மக்கள் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். மக்களின் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை திமுக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணைச் செயலர் எஸ். ஜோயல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மக்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை, முன்னாள் மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், மகளிரணி செயலர் கஸ்தூரி தங்கம், மாநகரச் செயலர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments