முகப்பு
தூத்துக்குடி

"தூத்துக்குடியில் நாளை பேச்சு, ஓவியப் போட்டி'

தூத்துக்குடியில் நூலகம் குறித்த பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:04 am IST
பகிர்:

தூத்துக்குடியில் நூலகம் குறித்த பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.
 இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் கொ. சங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உலக புத்தக தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம்  மற்றும் முத்துநகர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான நூலகம் பற்றிய விழிப்புணர்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி வியாழக்கிழமை (ஏப். 19) மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.
ஓவியப்போட்டியில் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் கலந்துகொள்ளலாம்.  பாரதியார் மற்றும் அவருடைய எழுச்சி மிகு கவிதைகள் இரண்டு வரிகள்,  வ.உ.சிதம்பரனார் வரைபடமும் தேசிய முழக்கம் பற்றிய வரிகள் இடம் பெற வேண்டும். காந்தியடிகள் அவருடைய தத்துவ வரிகள் இரண்டு, பகத்சிங் வரைபடமும் விடுதலை பற்றிய இரண்டு வரிகளில் எழுச்சியுறைகள் மற்றும் நவீன நூலகம் வரைபடம் என்ற தலைப்புகளில் படம் இருக்க வேண்டும்.
பேச்சுப்போட்டியில் 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர், மாணவிகள் வரை கலந்துகொள்ளலாம். நூலகமும், கல்வித் துறையும்,  வாசித்தலும், வசித்தலும்,  கல்லூரி மாணவர்களும், நூலகமும், வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் நூல்கள் என இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.
 போட்டியில் வெற்றி பெறும் மாணவர், மாணவிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் உலக புத்தக தின விழாவில்,  பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகத்தை நேரிலும்,  0461-2338977 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.