முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பெரியார் நினைவு தினம்

பெரியார் நினைவு தினத்தை  கோவில்பட்டி அருகேயுள்ள   பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு

Updated On : 25 டிசம்பர் 2018, 7:17 am IST
பகிர்:

பெரியார் நினைவு தினத்தை  கோவில்பட்டி அருகேயுள்ள   பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு  அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   மதிமுக சார்பில் நகரச் செயலர் பால்ராஜ் தலைமையில், மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மேற்கு ஒன்றியச் செயலர் அழகர்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 
ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலர் ஆ.செண்பகராஜ் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், துணைத் தலைவர் மாரீஸ்வரி, நகரச் செயலர் தலித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments