முகப்பு
தூத்துக்குடி

"நகராட்சி தினசரி சந்தையில் உள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது'

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி

Updated On : 25 டிசம்பர் 2018, 7:18 am IST
பகிர்:

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
கோவில்பட்டி நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தையின் உள்புறம் சாலையோரத்தில் சுமார் 3  அடி அளவில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். 
ஆனால் தற்போது சாலையோரக் கடைகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டு, கடைகளை அப்புறப்படுத்தும் பணி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், நகராட்சி தினசரி சந்தையில் ஒருபக்கச்சுவரை இடித்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கின்றனர்.  ஆனால் அதே பகுதியில் சாலையோரம் வியாபாரம் செய்து வருவதை தடுத்து வருவது சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது போன்றதாகும். எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாலையோர வியாபாரிகளுக்கு தினசரி சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடையின் ஒருபக்கச் சுவரை இடித்து புதிதாக வாசலை உருவாக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர் முத்துப்பாண்டி தலைமையில், அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் அண்ணாத்துரை, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவர் புருஷோத்தமன், செயலர் சின்னமாரிமுத்து மற்றும் சிறு வியாபாரிகள் திரளானோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். 
பின்னர் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments