அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்த சிறப்பு முகாம்: தூத்துக்குடியில் இன்று தொடக்கம்
தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) முதல் இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) முதல் இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துதல் தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், மனை உரிமையாளர்கள் மனைப் பிரிவு வரைபடம், சுற்று சார்பு வரைபடம், பத்திர நகல், பட்டா, சிட்டா நகல், வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணங்களையும் செலுத்தி விண்ணப்பித்து மனையை வரன்முறைப்படுத்தி அதே இடத்தில் உத்தரவு பெற்றுக் கொள்ளலாம். மேலும், மேற்கு மண்டல அலுவலகத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதிகளிலும் முகாம் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.