முகப்பு
தூத்துக்குடி

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முற்றுகை

சீராக குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை  திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.  

Updated On : 24 ஜூலை 2018, 12:54 am IST
பகிர்:

சீராக குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை  திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.  
 கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 29ஆவது வார்டு அண்ணா தெரு வாசுதேவக்காரன் பகுதியில் உள்ள நான்கு தெருக்களில் கடந்த 2   ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் சீராகவில்லையாம். இதுகுறித்து நகராட்சி பொறியியல் பிரிவில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, நகரக் குழு உறுப்பினர் சக்திவேல்முருகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டு பகுதிகளிலும் ஒரே சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். 
கடந்த 2  ஆண்டுகளாக குடிநீர் விநியோகத்தை சீராக செய்யப்படாத வாசுதேவக்காரன் பகுதியில் முகாமிட்டு குடிநீர் சீராக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில்பட்டி பிரதான சாலைகளில் தனிக்குடிநீர் திட்டப் பணிக்கான பகிர்மானக் குழாயை சாலைகளில் ஆங்காங்கே போட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அண்ணா பேருந்து நிலையத்தின் தரைதளம் மோசமாக உள்ளதை சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.  பின்னர் கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையர் அச்சையாவிடம் வழங்கினர். 
 இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் குருசாமி கூறியது:   பொறியியல் துறை சார்பில் அப்பகுதியில் முறையாக ஆய்வு செய்து குடிநீர் சீராக கிடைப்பதற்கான பணி நடைபெறும். வியாழக்கிழமை முதல் இப்பகுதி பொதுமக்களுக்கும் குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கும்.   இதுபோன்று பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களை பொறியியல் துறை முறையாக ஆய்வு செய்து குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments