முகப்பு
தூத்துக்குடி

தோல் பொருள்கள் செய்முறை பயிற்சி: ஜூலை 30க்குள் பதிவு செய்ய அழைப்பு

தோல் பொருள்கள் செய்முறை பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2018, 8:00 am IST
பகிர்:

தோல் பொருள்கள் செய்முறை பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 மத்திய அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் தோல் மற்றும் காலனிகள் செய்முறை பயிற்சி நிறுவனம் மூலம் பல்வேறு தோல் பொருள்கள் மற்றும் பல்வேறு வகையான காலனிகள் செய்முறைப் பயிற்சிகள் முழு நேர மற்றும் பகுதி நேரமாக  நடத்தப்பட உள்ளன.
 இதில்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களும்,  இதர வகுப்பினரும் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையலாம்.  முழு நேர பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகும்.   வயது வரம்பு 17 முதல் 35 வரை.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களும் இந்தப் பயிற்சியில் சேரலாம். குறுகிய கால மற்றும் பகுதி நேர பயிற்சியில் 8 ஆம் வகுப்பு,  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியான நபர்கள் இந்தப் பயிற்சி மையத்தில் தங்களது விருப்பத்தின்படி பல்வேறு பயிற்சிகளில் ஏதேனும் ஒரு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி.  
எனவே,  பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள்,  தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலத்துக்கு நேரில் சென்று ஜூலை 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும். 
 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு உறைவிடம்,  பயிற்சி கட்டணம் இலவசம் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.
 மேலும் இதர வகுப்பினரும் பயிற்சி முகாமில் கட்டணத்துடன் கலந்து கொள்ளலாம்.
 பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கல்வித்குதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். 
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை  0461-2340607 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments