முகப்பு
தூத்துக்குடி

3 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: கோவில்பட்டியில் பல கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேக்கம்

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவில்பட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேங்கியுள்ளன. 

Updated On : 23 ஜூலை 2018, 8:02 am IST
பகிர்:

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவில்பட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேங்கியுள்ளன. 
கோவில்பட்டி பகுதியிலும் இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 3ஆவது நாளாக தொடர்ந்தது. இதனால் கோவில்பட்டி,  கழுகுமலை,  எட்டயபுரம்,  கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலைகளிலிருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பமுடியாமல் தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேங்கியுள்ளன. தீப்பெட்டி தயாரிப்பு, நூற்பாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  கோவில்பட்டி தினசரி சந்தைக்கு கேரட்,  உருளைக்கிழங்கு,  பல்லாரி,  பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகள் மதுரை,  திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மினி லாரிகளில் குறைந்த அளவே வருகின்றன. இதனால் காய்கனி விலை உயர்ந்துவருகிறது. எனவே,  லாரிகள் வேலைநிறுத்தப் பிரச்னைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  லாரிகள் வேலைநிறுத்தத்தால் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலை, ராமசாமி தாஸ் பூங்கா தெரு சாலை, தோட்டிலோவன்பட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி சம்மேளன நிர்வாகிகளும் லாரி ஓட்டுநர்களும் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தம் குறித்த துண்டுப் பிரசுரங்களை ஓடும் லாரிகளை நிறுத்தி விநியோகித்ததுடன்,  லாரிகளில் நோட்டீஸ்களை ஒட்டினர். இதை அனுமதிக்க முடியாது விருதுநகர் மாவட்ட போலீஸார் கூறினராம். இதனால் தோட்டிலோவன்பட்டி விலக்கில் காவல் துறையினருக்கும்,  லாரி சம்மேளனத்தினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments