வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்
கோவில்பட்டி பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல்,பெயர் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.
கோவில்பட்டி பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல்,பெயர் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில் நடைபெற்ற முகாமில் கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முகாமை கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
புதிய வாக்காளர்கள் 2,519 பேரும், திருத்தம் செய்ய 418 பேரும், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 306 பேரும், பெயர் நீக்கம் செய்ய 85 பேரும் விண்ணப்பம் அளித்தனர்.