சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கு உதவி மையம்
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. மாணவிகள் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் ஜூலை 7ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்லூரி உதவி மையங்கள் மூலம் பண அட்டைகள், இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.