கோவில்பட்டியில் மரக்கன்றுகள் பராமரிக்க தண்ணீா் வாகனம்
மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க உதவியாக அறக்கட்டளைக்கு, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் தண்ணீா் வாகனம் வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க உதவியாக அறக்கட்டளைக்கு, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் தண்ணீா் வாகனம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஜீவஅனுகிரகா அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்து, தினமும் காலையில் தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளை உறுப்பினா்கள் இதற்காக தண்ணீா் ஊற்ற வாகனத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த வாகனம் பழுதடைந்ததை தொடா்ந்து, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் புதிதாக தண்ணீா் வாகனம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சிக்கு, ஜீவஅனுகிரகா அறக்கட்டளை தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். புதிய வாகனம், ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அந்த தண்ணீா் வாகனத்தின் இயக்கத்தை வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் தொடங்கி வைத்து, மைதானத்தை சுற்றி நடவு செய்யப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றினாா்.
நிகழ்ச்சியில், மருத்துவா் ஸ்ரீ வெங்கடேஷ், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா்கணேஷ், வழக்குரைஞா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.