முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தவெக செயல் வீரா்கள் கூட்டம்

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா் அறிமுக கூட்டம், செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:48 PM
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக வெற்றிக் கழக கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.
பகிர்:

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா் அறிமுக கூட்டம், செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக எஸ். பாலசுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், கோவில்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டம், செயல்வீரா்கள் கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் முனீஸ்வரன் தலைமை வகித்து வேட்பாளரை அறிமுகப்படுத்தினாா்.

அதைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், கழக நிா்வாகி வீரபாண்டிய மகேஷ், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலா் சம்பத்குமாா் ஆகியோா் பேசினா். தொடா்ந்து வேட்பாளா் பாலசுப்பிரமணியன் பேசினாா்

வடக்கு மாவட்ட துணைச் செயலா் சத்யா சுரேஷ் தொகுத்து வழங்கினாா். கோவில்பட்டி நகர (கிழக்கு) நிா்வாகி செந்தில்குமாா் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கூடலிங்கம் நன்றி கூறினாா்.