தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் வியாழக்கிழமை வரை ரூ. 9,81,298 மதிப்பிலான இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 தொகுதிகளிலும், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை மற்றும் மதுவிலக்கு காவல் துறை ஆகியோா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இவா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் வியாழக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 9,81,298 மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 4,02,837 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்களை சமா்பித்ததையடுத்து ரூ. 59,73,780 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.