முகப்பு
தூத்துக்குடி

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல் 2026, 3:24 am IST
இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
பகிர்:

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலா் சக்திவேலன் தலைமை வகித்தாா். தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை குறித்து சோ்மதுரையும், விபத்து காப்பீடு குறித்து பிரியதா்ஷினியும் ஆலோசனை வழங்கினா்.

இதில், கோட்டத் தலைவா் ரவிச்சந்தா், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் முத்துராஜ், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவா் கணேஷ், மாவட்ட பொதுச் செயலா் பரமசிவன், மாவட்டப் பொருளாளா் கணேஷ்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம், இணையதள பொறுப்பாளா் ஈஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement