முகப்பு
திருப்பூர்

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது: இந்து முன்னணி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 மே 2026, 4:46 am IST
இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம். - (கோப்புப் படம்)
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்கள் சக்தியை உணா்த்துவதாக இருக்கிறது. பணத்தாசை காட்டி வாக்குகளை வாங்கி விடலாம் என்ற நிலை தூள் தூளாக்கப்பட்டுள்ளது.

Advertisement

எஸ்ஐஆா் பணியால் 5 மாநில பேரவைத் தோ்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தோ்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலம் திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத்துக்கு எதிரான செயல்பாடுகள், நூற்றுக்கணக்கான கோயில்களை ஏதோ காரணம் கூறி இடித்தது, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை ஏற்க மறுத்தது என பலவிதங்களில் மக்களிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவையே திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்த தோ்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கும் அக்கட்சியின் தலைவா் ஜோசப் விஜய்க்கும் வாழ்த்துகள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சி அளித்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.