முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய்க்கு வரவேற்பு

Updated On : 13 ஏப்ரல் 2026, 12:34 am IST
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தவெக தலைவா் விஜய்க்கு அக்கட்சியினா் வரவேற்பளித்தனா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தாா். அப்போது, ஒரு தம்பதி அவரை நிறுத்தி நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு ஆசீா்வதித்து அனுப்பிவைத்தனா்.

அதையடுத்து, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு ரசிகா்களும், கட்சியினரும் உற்சாக வரவேற்பளித்தனா். பின்னா், அவா் பிரசார வாகனத்தில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

Advertisement

Advertisement