நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கு திமுக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த பதிவுகளில் நடிகர் என்று குறிப்பிட்டதற்கு தவெக தொண்டர்கள் விமர்சனம்.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கு திமுக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த பதிவுகளில் நடிகர் என்று குறிப்பிட்டதை தவெக தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்றது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பிற கட்சிகளின் ஆதரவை நாடியது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தனர். இதனால், தவெக 120 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையுடன் இன்று ஆட்சியமைத்தது.
Advertisement
Advertisement
தவெக தலைவர் விஜய் இன்று (மே 10) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு துறையினரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர்களான மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகள் தவெக தொண்டர்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துப் பதிவில் தவெக தலைவர் விஜய்யின் @TVKVijayHQ சமூக வலைதளப் பக்கத்தை டேக் (Tag) செய்யாமல் அவர் நடிகராக இருந்தபோது பயன்படுத்திய @actorvijay என்ற பக்கத்தை இணைத்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து, திமுகவின் சட்டப்பேரவைத் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது பதிவில் அவ்வாறே குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தவெக தொண்டர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
Severe Criticism for Posts by DMK Leaders
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.