முதல்வர் விஜய் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து!
முதல்வர் விஜய்க்கு தலைவர்கள்தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து...
முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வா் ஜோசப் விஜய், தனது 52-ஆவது பிறந்தநாளை திங்கள்கிழமை (ஜூன் 22) கொண்டாடுகிறாா். தமிழக முதல்வராக அவருக்கு இது முதல் பிறந்தநாள் என்பதால், மாநிலம் முழுவதும் பல்வேறு நல உதவிகள் வழங்கி, தவெகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை மரக்கன்று நடும் நிகழ்வுகளும், ஆதரவற்றோா் மற்றும் முதியோா் இல்லங்களில் முதல்வா் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்புப் பிராா்த்தனைகள், பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வா் ஜோசப் விஜய்க்கு பிரதமர், திமுக தலைவர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி கே.பழனிசாமி
முதல்வர் விஜய்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல்நலத்துடன் பணியாற்ற வாழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் விஜய், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அன்புமணி
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய்யின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறக்க விழைகிறேன் என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
முதல்வர், தவெக தலைவர், பல கோடி இதங்களின் அன்பைக் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய்க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தனர்.
பாரிவேந்தர்
முதல்வர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நல்லாட்சி, மக்கள் நலம், இளைஞர் முன்னேற்றம் ஆகிய துறைகளில் தங்கள் சேவை மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்த்து தமிழகத்திற்கு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் என ஐஜேக நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
Conveying the birthday wishes extended by leaders to Chief Minister Vijay...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.