FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேசிய தன்னார்வ ரத்த தான நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய தன்னார்வ ரத்த தான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது தொடர்பாக...

தேசிய தன்னார்வ ரத்த தான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து - எக்ஸ்
பகிர்:

அக்டோபர் ஒன்றாம் நாள், தேசிய தன்னார்வ ரத்த தான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் விஜய், சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,

தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்து உயிர்களைக் காப்பதுடன், மனிதநேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டும் அனைத்து ரத்தக் கொடையாளர்களுக்கும் தேசிய தன்னார்வ ரத்த தான நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

Advertisement

Advertisement

அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களைக் காக்க ரத்த தானம் இன்றியமையாதது. நாம் கொடையாக அளிக்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒரு மனிதனின் உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது.

ரத்த தானம் அளிக்கும் கொடையாளர்கள், சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்களாகத் திகழ்கின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவையும், உன்னதமான மனிதநேயமும் என்றும் போற்றத்தக்கவை.

தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் சென்று, ரத்த தானம் செய்யும் விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! ரத்த தானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்! என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

National Voluntary Blood Donation Day : CM Message

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments