பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
Advertisement
Advertisement
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.