படகோட்டப் போட்டியில் பதக்கம் வென்ற நேத்ராவுக்கு ரூ. 30 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
படகோட்டப் போட்டியில் பதக்கம் வென்ற நேத்ராவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவிப்பு...
படகோட்டப் போட்டியில் பதக்கம் வென்ற நேத்ராவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா மாகாணத்தில் ஆசிய விளையாட்டுத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பெண்களுக்கான டிங்கி படகுப் பிரிவில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்த நிலையில், படகோட்டப் போட்டியில் பதக்கம் வென்ற நேத்ரா குமணனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 30 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப் போட்டி (Sailing) பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Chief Minister Vijay has announced that a cash incentive of ₹30 lakh will be awarded to Nethra, who won a medal in the sailing competition.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.