ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!
ஆசிய விளையாட்டில் 2 பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு குஜராத் அரசு ரூ. 1.33 கோடி வழங்கியது குறித்து...
ஆசிய விளையாட்டில் 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு குஜராத் அரசு திங்கள்கிழமை (செப். 28) ரூ. 1.33 கோடி வழங்கி கௌரவித்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவு மற்றும் அணிப் பிரிவு என இரண்டிலும் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
தமிழகத்தின் கடலூரில் பிறந்த இளவேனில் வாலறிவன் தனது சிறுவயது முதலே குஜராத்தில் வளர்ந்து, அம்மாநிலத்தின் விளையாட்டுத் திட்டங்களின் மூலம் தேசிய அளவிலான வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து, ஆசிய விளையாட்டில் 2 பதக்கங்கள் வென்றதால் அவரது திறமையைப் பாராட்டி, விளையாட்டுத் திறமையாளர் விருதுத் திட்டத்தின் கீழ் ரூ.1.33 கோடிக்கான காசோலையை குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, இளவேனில் வாலறிவனுக்கு இன்று வழங்கினார்.
குஜராத் மாநிலத்தின் DLSS திட்டத்தின் கீழ் சன்ஸ்கர்தாமில் கல்வி பயின்ற இளவேனில், டோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Gujarat government honored Elavenil Valarivan on Monday (Sept. 28) by awarding her ₹1.33 crore for winning two silver medals at the Asian Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.