பிரதமரைச் சந்திக்கும் ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள்!
ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்கவிருப்பது பற்றி...
ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை நாளைக்குச் சந்திக்க இருக்கிறார்கள்.
ஜப்பானில் நடந்து முடிந்த ஆசிய பாரா விளையாட்டில் இந்திய அணியினர் வரலாற்றுச் சாதனை படைத்தார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் 114 பதக்கங்களை வென்றார்கள்.
30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என புதிய வரலாற்றை நமது பாரா விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தி காட்டினார்கள். பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்தார்கள்.
Advertisement
Advertisement
இந்த வெற்றியாளர்கள் நாளைக்கு மாலை 4.30 மணிக்கு இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவிருக்கிறார்கள் என்பதை பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களையும் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
பதக்கம் வென்றவர்கள் மட்டுமில்லாமல் பயிற்சியாளர்கள், அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.