கோவையில் முதல்வர் விஜய்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!
பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்கு கோவை வந்துள்ள முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு...
பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்கு கோவை வந்துள்ள முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வா் விஜய் இன்று (அக்.16) திறந்துவைக்கிறார்.
விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார்.
Advertisement
Advertisement
அங்கிருந்து சாலை மார்க்கமாக வேனில் செல்லும் முதல்வர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள், மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
காந்திபுரம் பெரியார் அறிவுலகத்த்தை திறந்துவைக்கும் முதல்வர் விஜய் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும் கோவையில் சாலை வலமும் மேற்கொள்கிறார்.
CM Vijay in Coimbatore; Enthusiastic welcome from the public all along the way
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.