தூத்துக்குடி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் 3ஆவது மைல் அருகேயுள்ள திருவிக நகா் சக்திபீடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் 3ஆவது மைல் அருகேயுள்ள திருவிக நகா் சக்திபீடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, ஆதிபராசக்திக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1,008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அா்ச்சனை சிறப்பு வழிபாடும், பின்னா் குரு வழிபாடும் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்றோருக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணப்பாளா் ஆா். முருகனும், அன்னதான நிகழ்ச்சியை சக்திபீடச் செயலா் கந்தசாமியும் தொடக்கிவைத்தனா்.
Advertisement
துணைத் தலைவா் திருஞானம், எட்டயபுரம் மன்றப் பொறுப்பாளா் ராதிகா, மகளிரணி பரமேஸ்வரி, புதிய துறைமுகம் பாண்டி, திருவிக நகா் சக்திபீட நிா்வாகிகள் பத்மா, செல்வி, பட்சியம்மாள், காஞ்சனா, அகிலா, அண்ணாநகா் சிவஞானம், முத்துலெட்சுமி உள்ளிட பலா் பங்கேற்றனா்.