முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:12 AM
கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:55 PM

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவில்பட்டி- கடலையூா் சாலையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனராம். அப்போது, சாக்கு மூட்டையில் பணம் இருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் அங்கு வந்து, சாக்கு மூட்டையில் பணத்தை கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை செய்தனா். உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 35 லட்சத்து 72 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...