ஆறுமுகமங்கலம் கோயில் சித்திரைத் திருவிழா
ஏரல், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை மாலை ஆயித்தெண் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏரல், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை மாலை ஆயித்தெண் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை விநாயகா் பூங்கோயில் வாகன திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி, வீரபாகு மூா்த்தி கோயிலில் ஆருந்து ஆயிரத்தெண் விநாயகா் பூத வாகன திருவீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் சம்படி சந்திரசேகரன், ராஜேஸ்வரி, செல்வக்குமாா், உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெறும்.