FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

3 ஜூலை 2026, 4:42 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் புதன்கிழமை 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை வடபாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 6.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி, மேலூா் ரயில் நிலையப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரைப் பிடித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள் போல்பேட்டை, மகேஷ்குமாா் மகன் மாரி பிரபாகரன் (26), கந்தசாமிபுரம், முருகேசன் மகன் முத்து மணிகண்டன் (30), முகமது சதாலிபுரம், முருகன் மகன் சக்தி ஆனந்த் (31) என்பது தெரிய வந்தது.

அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments