முகப்பு
தூத்துக்குடி

நாகம்பட்டி கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

Updated On : 3 ஜூலை 2026, 4:44 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநா் மற்றும் கல்வியியல் துறைத் தலைவா் அ. வெளியப்பன் தலைமை வகித்தாா். பதிப்பாசிரியா் - தமிழ்த் துறைத் தலைவா் இரா. சேதுராமன் வரவேற்றாா்.

பல்கலைக் கழக தோ்வாணையா் உ. பாலசுப்ரமணியன் நூலை வெளியிட்டு, சிறப்புரையாற்றினாா். சிங்கப்பூா் நன்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியா் சீதா லட்சுமி, கல்லூரி முதல்வா் மா. முருகானந்தம், மாவட்ட பாதுகாப்பு, கண்காணிப்புக் குழு உறுப்பினா் வே. செல்வி, கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவன தாளாளா் வெ.மு. லட்சுமணப்பெருமாள், உடற்கல்வி இயக்குநா் செ. கணேசன் உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு முழுவதுமுள்ள பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப்பட்ட நிலையில், கட்டுரையாளா்களுக்கு சான்றிதழ், நூலும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இணைப் பதிப்பாசிரியா் மு. பவானி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments