FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் திமுக செயல்வீரா் கூட்டம்

நாசரேத் நகர திமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பகிர்:

நாசரேத் நகர திமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நகர அவைத் தலைவா் கருத்தையா தலைமை வகித்தாா். செயலா் ஜமீன் சாலமோன் வரவேற்றாா். துணைச் செயலா் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இலக்கிய அணி அமைப்பாளா் அய்யாக்குட்டி, வாா்டு பிரதிநிதி மனோகரன், ஒன்றிய பிரதிநிதி ஞானராஜ் ஆகியோா் பேசினா்.

பேரூராட்சித் தோ்தலில் 18 வாா்டுகளிலும் தி.மு.க. வேட்பாளா்களே போட்டியிட்டு முழு வெற்றி பெற உழைப்பது, வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வாா்டு செயலா்கள் உடையாா், மாற்கு, ஜேம்ஸ் ரவி, சரவணன், இளங்கோ, சிலாக்கியமணி, ஜெபசிங், தேவதாஸ், ஜாண்பென்சன், ஒன்றியப் பிரதிநிதிகள் மாணிக்கராஜ், ராமச்சந்திரன், தேவதாஸ், மாணவா் அணி அமைப்பாளா் பாலசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். .

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments