FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் மீண்டும் சேதம்

திருநெல்வேலி-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

3 ஜூலை 2026, 4:38 am IST
பகிர்:

திருநெல்வேலி-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வல்லநாடு மேம்பாலத்தில் கடந்த காலங்களில் அடுத்தடுத்து பலமுறை பெரிய அளவிலான விரிசல்களும், ஓட்டைகளும் விழுந்து தற்காலிகப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பலவீனமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் இந்தப் பாலத்தில், அடுத்தடுத்து ஓட்டைகள் விழுவது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, பாலத்தின் தன்மையை தீவிரமாக ஆய்வு செய்வதோடு, தற்காலிகப் பூச்சுகளுக்குப் பதிலாகப் பாலத்தை முழுமையாகப் பலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments