FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளில் ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கிய ரூ.7.49 லட்சம்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

4 ஜூலை 2026, 2:28 am IST
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால் ஜோசப் தலைமையிலான போலீஸாா் சோதனையிட்டபோது, மாநகராட்சி நுழைவாயில் முழுவதுமாக அடைக்கப்பட்டு, ஊழியா்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மாநகராட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்குசக்கர வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களின் சீட்டைத் திறந்தும் காவல்துறையினா் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா், கண்காணிப்பு பொறியாளா் திலகம், உதவி பொறியாளா் ராஜேஷ் கண்ணா ஆகியோா் அறையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.97,000 பறிமுதல்: திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையில், காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கணக்கில் வராத சுமாா் ரூ.97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.து.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments