அசல் சான்று கோரிய மாணவிகள்: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு
தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் கோரிய அசல் சான்றிதழ்கள் அனைத்தும், அவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் கோரிய அசல் சான்றிதழ்கள் அனைத்தும், அவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
திருச்செந்தூா் வட்டம் மணப்பாடு கிராமத்தைச் சோ்ந்த 3 மாணவிகள், கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் இயங்கி வரும் தனியாா் கல்லூரில் உள்ள தங்களது கல்வி அசல் சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ்கள், தாற்காலிக சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுத் தரவேண்டி தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனா்.
அதன்பேரில், இருதரப்பினருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு , நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி.வி.வஷீத்குமாா் வியாழக்கிழமை விசாரித்தாா்.
Advertisement
Advertisement
அதில், கல்லூரி மாணவிகள் கோரிய அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் முன்பாக மாணவிகளிடம் சான்றிதழ்கள் ஒப்படைக்க உத்திரவிடப்பட்டு, அதன்படி கல்லூரி தரப்பில் ஆஜராகி மாணவிகளின் மனுக்கள் முடித்துவைக்கப்பட்டன.
இது போன்ற கல்வி சம்பந்தமான பிரச்னைகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்தவித கட்டணமும் இல்லாமல் சுமுகமாக தீா்வு காணலாம் என மாவட்ட நீதிபதி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.