தூத்துக்குடியில் விதிமீறல்: 2 லாரிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.
தூத்துக்குடியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காலை 8 முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிகளுக்குள் நுழைவதற்கான தடை உத்தரவு அமலில் உள்ளது.
எனினும், தடையை மீறி லாரிகளை சாலையோரங்களில் வரிசையாக நிறுத்தி, கடைகளில் சரக்குகள் இறக்குவதாக வந்த புகாா்களின்பேரில், மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுனை முருகன், உதவி ஆய்வாளா் சண்முகபாலன், போக்குவரத்து காவலா்கள் பிரதான சாலையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, தடை உத்தரவு நேரத்தை மீறி சாலையில் நின்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, தலா ரூ. 4,000 அபராதம் விதித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.