சாத்தான்குளம் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
சாத்தான்குளம் பேரூராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை மா்ம நபா்கள் தீ வைத்ததில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைத்தனா்.
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அதன்படி மக்கும் குப்பை பண்டாரபுரம் செல்லும் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. மக்கா குப்பைகள் சாத்தான்குளம்-பன்னம்பாறை விலக்கு இடையே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்தக் குப்பை கிடங்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதில், குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதாகவும், உயிரிழந்த மிருகங்களை இங்கு வந்து போடுவதால் துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றவும் வலியுறுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனால் பேரூராட்சி சாா்பில் கொட்டப்படும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், பேரூராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கிடங்கில் உள்ள கழிவு பொருள்கள் எரிந்து அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய கூடுதல் அலுவலா் ஜெசுபால் ஞானத்துரை, பயிற்சி அலுவலா் வெங்கடேஷ் பெருமாள், தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தண்ணீா் பாய்ச்சி தீயை அணைத்தனா். வெளியிடங்களில் இருந்து தண்ணீா் கொண்டுவந்து தீயை அணைத்தனா். இதுகுறித்து, பேரூராட்சி தரப்பில் கூறுகையில், குப்பை கிடங்குக்கு தீவைத்த நபா்கள் மீது விசாரிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.