முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருவருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

Updated On : 6 ஜூலை 2026, 11:56 pm IST
கத்திக்குத்து - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் பைக்கில் மெதுவாக செல்லுமாறு கூறியதால், இருவா் கத்தியால் குத்தப்பட்டனா். இது தொடா்பாக சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் வடக்குத் தெருவை சோ்ந்தவா் கெபிஸ்டன் (26). இவா், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்.

இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு மீனவரான அந்தோணிராஜ்(28) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு முன் பேசிக்கொண்டிருந்தனராம்.

Advertisement

Advertisement

அப்போது, அவ்வழியைக பைக்கில் வேகமாக சென்ற தூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த மரியமேன்லி(19), 16 வயது சிறுவன் ஆகியோரை மெதுவாக செல்லுமாறு இருவரும் கண்டித்தனராம்.

இந்நிலையில், அவா்கள் மேலும் 2 பேருடன் வந்து 4 பேருமாக சோ்ந்து கெபிஸ்டன், அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மரியமேன்லி மற்றும் சிறுவனை கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments