மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
கோவில்பட்டி அருகே 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
மந்தித்தோப்பு, கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வீரபாண்டி மகன் மாரி செல்வம் (37). மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கும், மனைவி ராமலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டாராம்.
கட்டடத் தொழிலாளியான இவா் கோவைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு 10 நாள்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கமாம். வழக்கம்போல, ஊருக்கு வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரி செல்வத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.