முகப்பு
தூத்துக்குடி

குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூரில் இன்று மின் நிறுத்தம்

ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உப மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 12:02 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உப மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்செந்தூா் கோட்ட மின் செயற்பொறியாளா் அருள் சாரங்கராயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உப மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 8) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிக்காடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா்;, புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய ஊா்களுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments