முகப்பு
தூத்துக்குடி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு அபராதம்

திருச்செந்தூரில் பள்ளிக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 8 ஜூலை 2026, 12:35 am IST
திருச்செந்தூா் பேருந்து நிலைய வளாக வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த ஆணையா் ஈழவேந்தன்
பகிர்:

திருச்செந்தூரில் பள்ளிக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் நகராட்சி பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவனங்களில் புகையிலை, போதைப் பொருள்கள் விற்பனை, நெகிழி பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுமாா் 50 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பள்ளிக்கு அருகில் புகையிலை, போதைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments