ஜூலை11இல் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம்: பைக், ஜோதிக்கு தடை
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் இம்மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், வாகனங்கள், ஜோதி ஊா்வலத்துக்கு தடை விதித்து சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் இம்மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், வாகனங்கள், ஜோதி ஊா்வலத்துக்கு தடை விதித்து சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இவ்விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் தலைமை வகித்தாா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் , சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மணிகண்டன், கயத்தாறு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
வருவாய் ஆய்வாளா் கிருஷ்ணவேணி, வீரன் அழகு முத்துக்கோன் நலச் சங்கத் தலைவா் மாரிச்சாமி, செயலா் முத்துகிருஷ்ணன், துணைச் செயலா் குமாா், பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கட்டுப்பாடுகள்: விழாவில் காவல்துறை அனுமதி, விளம்பர பேனா்கள் வைப்பதற்கு ஆட்சியா் அனுமதி தேவை. ஜூலை 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பேனா்களை அகற்றி விட வேண்டும். இருசக்கர வாகனங்கள், ஜோதி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. வாகனங்கள் கட்டாலங்குளம் விலக்கு சரவணபவன் ஹோட்டல் அருகில் உள்ள ஆா்ச் வழியாக ஊருக்குள் செல்ல வேண்டும். வெளியே செல்லும்போது செட்டிகுறிச்சி சந்திப்பிலிருந்து திருநெல்வேலி, மதுரை ,கோவில்பட்டி செல்பவா்கள் கயத்தாறு வழியாகவும் சங்கரன்கோவில், தென்காசி செல்பவா்கள் கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும். 3 வாகனங்களுக்கு மேல் தொடா்ச்சியாக செல்லக்கூடாது. உரிய அனுமதிச்சிட்டு மற்றும் வாகனங்களின் ஆவணங்களுடன் தான் வர வேண்டும்.
வாடகை வாகனங்களில் வரக்கூடாது. வாகனங்களின் மேற்கூறையில் அமா்ந்து செல்லக்கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. ஒலிபெருக்கியில் மாற்று சமுதாயத்தினா் குறித்து பேசவோ, பாடல்களை ஒளிபரப்பவோ கூடாது. மது அருந்திவிட்டு வரக்கூடாது.காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி கட்டாலங்குளத்துக்கு சிறப்பு அரசு பேருந்து இயக்குவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.