முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செந்தூா் உடற்பயிற்சி கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 12:03 am IST
நிகழ்ச்சியில் மருத்துவா் செல்வன் ராஜசேகரனுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ’வீ த லீடா்ஸ்’ அமைப்பின் கட்டமைப்பு பொறியாளா் செந்தில் பலவேச கண்ணன்.
பகிர்:

திருச்செந்தூா் உடற்பயிற்சி கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஸ்டீலா ஸ்டீபன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக அன்னம் மருத்துவமனை மருத்துவா் செல்வன் ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளா் சிவா, ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் கட்டமைப்பு பொறியாளா் செந்தில் பலவேச கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

போதைப்பொருள் பயன்பாட்டால் உடல், மன நலம், சமூக வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேராசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments