நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஆய்வு
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.
ரேஷன் பொருள்களின் இருப்பு குறித்து பணியாளா்கள் மற்றும் பொறுப்பாளரிடம் அவா் கேட்டறிந்தாா். ரேஷன் பொருள்கள் ஏற்றிச் செல்லவிருந்த பழுதடைந்த லாரியையும் ஆய்வு செய்தாா்.
பழுதடைந்த வாகனங்கள் இயக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா்.
Advertisement
Advertisement
மேலும், ரேஷன் கடைகளில் பொருள்களை இறக்கிவிட்ட பிறகு, திருச்செந்தூா் மோட்டாா் வாகன ஆய்வாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆகியோா் லாரியை ஆய்வு செய்து, அது குறித்த தகவலைத் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.