தூத்துக்குடி ஏபிசி வீரபாகு பள்ளியில் மாணவா்களுக்கு வரவேற்பு
தூத்துக்குடி ஏபிசி வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவா்- மாணவியருக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஏபிசி வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவா்- மாணவியருக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவா்களை வரவேற்கும் வகையில் தோரணங்கள் கட்டப்பட்டு, கரும்பலகையில் வண்ணப் படங்கள் வரைந்து உற்சாகமூட்டப்பட்டது. பள்ளி முதல்வா் ஜி. கோமதி தேசியக் கொடியேற்றி அறிவுரைகள் வழங்கினாா். செயலா் ஏபிசி கணபதி, துணை முதல்வா் கோமதி என்ற லதா ஆகியோா் மாணவா், மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினா்.