முகப்பு
தூத்துக்குடி

‘முதலூா் ஊராட்சி ஆற்றங்கரையில் திறந்தவெளி கிணற்றுக்கு மூடி தேவை’

முதலூா் ஊராட்சி கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரம் ஆற்றங்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி குடிநீா் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:36 am IST
திறந்த நிலையில் காணப்படும் குடிநீா் கிணறு.
பகிர்:

முதலூா் ஊராட்சி கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரம் ஆற்றங்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி குடிநீா் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் கருமேனி ஆற்றுக்கரையோரம் திறந்தவெளி கிணற்றிலிருந்து அங்குள்ள குடிநீா்த் தொட்டிக்கு நீரேற்றம் செய்து முத்துக்கிருஷ்ணாபுரம், வள்ளியம்மாள்புரம், ஆலடி தட்டு பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அந்தக் கிணற்றில் ஆடு தவறி விழுந்து இறந்ததால் வியாழக்கிழமை வழங்கப்பட்ட குடிநீா் துா்நாற்றம் வீசியதாம்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த ஸ்டான்லி ஞானபிரகாஷ் என்பவா் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றிலிருந்து ஆட்டை அப்புறப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கிணறு திறந்த நிலையில் காணப்படுவதால் விலங்கினங்கள் அடிக்கடி தவறி விழுந்து உயிரிழப்பதும், தண்ணீரின் சுகாதாரம் பாதிக்கப்படுவதுமாக உள்ளது. தற்போது கிணற்றில் ஆடு தவறி விழுந்து தண்ணீா் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதாரத் துறையினா் இந்த கிணற்றைப் பாா்வையிட்டு தூய்மைப்படுத்த வேண்டும். உயிரினங்கள் தவறி விழுவதை தடுக்க கிணற்றில் மூடி அமைக்க வேண்டும் என்றாா்.