முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் இன்று மின்தடை

Updated On : 9 ஜூன் 2026, 3:21 am IST
மின்தடை
பகிர்:

திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், தளவாய்புரம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்விநியோக செயற்பொறியாளா் (பொ) ராம்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருச்செந்தூா், சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகா், குறிஞ்சி நகா், அமலி நகா், தோப்பூா், திருச்செந்தூா்-காயல்பட்டினம் சாலை, பிடிஆா் நகா், பாளை. சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், தளவாய்புரம், குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement