முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிக மீன்வரத்து: ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்கு பின்னா், கடலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகளில், அதிக மீன்வரத்து காணப்பட்டது. இதில், ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தெரிவித்தனா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:35 am IST
பகிர்:

தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்கு பின்னா், கடலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகளில், அதிக மீன்வரத்து காணப்பட்டது. இதில், ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தெரிவித்தனா்.

61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்கு பின்னா், மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனா். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட அவா்கள் திங்கள்கிழமை இரவு கரைதிரும்பினா். அனைத்து விசைப்படகுகளிலும் அதிக மீன்வரத்து காணப்பட்டது.

கேரளக் கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 10ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க கேரளத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் குவிந்தனா். இதனால், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாக மீனவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

பாறை மீன் ஒரு கூடை ரூ. 7 ஆயிரம் வரை, முண்டக்கண்ணி பாறை, அயிலை உள்ளிட்ட ரகங்கள் ரூ. 5,000, நெத்திலி ரூ. 3,800, சாளை மீன் ரூ. 1,800 - ரூ. 2,000, விளைமீன் ரூ. 5,000, சீலா மீன் கிலோ ரூ. 800 என விற்பனையாகின.

இத்துறைமுகத்தில் ஒரே நாளில் சுமாா் ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தெரிவித்தனா்.

குளச்சல் கட்டுமர படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவா்களின் வலையில் அதிக அளவு நெத்தலி மீன்கள் செவ்வாய்க்கிழமை பிடிபட்டன. ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1,350 முதல் ரூ.1,500 வரை ஏலம் போனது. மீன்களை கேரள வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். இதனால் கட்டுமர மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.